பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரான் என்று அறிந்தேன் பெரிசலில் பிச்சைக்காரன் காத்துக்கொண்டிருந்தான். அவன் கையில் ஏதோ ஒரு சிறிய மண்பாத்திரம் இருந்தது. அந்த வீட்டுக்காரர் முன்பு ஒரு பிச்சைக்காரனுக்கு வயிறு கிறையச் சோறு போட்டார் என்று கேள்வியுற்ருன் அவன். அதல்ை தனக்கும் அவனேப்போலவே பிச்சை கிடைக்கும் என்று நம்பி இவன் வந்து கிற்கிருன். அந்த வீட்டுக்காரரிடம் பிச்சை வாங்கினவன் அவ ரைப் பற்றி என்ன என்னவோ சொன்னன். அதல்ை இவ னுக்கு ஆவல் மிகுதியாயிற்று. ஆவலோடும், பசியோடும் அந்த வீட்டு வாசலில் அவன் காத்துக்கொண்டிருந்தான். வாசல் திறக்கவில்லை. பிச்சைக்காரன் சோர்வடைந்து திரும்பினன். 'என்னுடைய பொல்லாத காலம்” என்று தன் விதியை கொந்து கொண்டு அவன் போய்விட்டான். மற்ருெரு நாள் ஆயிரக்கணக்கான பிச்சைக்காரர் களுக்கு யாரோ தர்மவான் சாப்பாடு போடுகிருர் என்று கேள்வியுற்ருன் இந்த ஏழை. அங்கே போய்ச் சர்ப்பிட் டான். சாப்பாடு போட்ட வள்ளல் அங்கே வரவில்லை. பிச் சைக்காரர்கள் யாவரும் அந்த வள்ளல வாயா வாழ்த் தினர்கள். தான் யாரைக் காண ஆவலாய்ச் சென்ருனே அந்தச் செல்வரே இந்தத் தர்மமும் செய்தார் என்று o உணர்ந்தபோது அவனுக்குப் பின்னும் ஆவல் மிகுந்தது. ஒருநாள் விடாப்பிடியாக அவரைத் தேடிக்கொண்டு சென்ருன் அவர் வீட்டு வாசலில் படுகாடாய்க் கிடந்தான். * ' ' ' ',

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/44&oldid=744408" இலிருந்து மீள்விக்கப்பட்டது