பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக்தருக்கு வாய்த்த பயன் - 45. கெருப்புப் போன்ற வெட்சி மலரை இடையிலே வைத்துத் தொடுத்த மனம் பொருந்திய துழாய் மாலேயை அணிந்த மார்பை உடையோய் நீ" என்று போற்றின்வர் அவர். 'அருஅ மைந்திற் செருஅச் செங்கட் செருமிகு திகிரிச் செல்வ, வெல்போர் எரிநகை இடையிடுபு இழைத்த நறுந்தார்ப் புரிமலர்த் துழாஅய் மேவல் மார்பினுேப்!” (அழியாத பலத்தையும் கோபிக்காமல் சிவந்த கண்ணேயும் சக்கரப் படையையும் உடைய அருட்செல்வனே! வெல்லுகின்ற போரையும், கெருப்புப் போன்ற வெட்சி அரும்பை இடையிட்டுத் கொடுத்த மனம் உள்ள மாலையையும், விரிந்த மலரையுடைய துழாயை விரும்பியணிந்த மார்பையும் உடையோய்!) இவ்வாறும் பிறவாறும் போற்றி செய்துவிட்டு இறுதி யில் தம் வேட்கையைத் தெரிவிக்கிருர், 'எனக்குப் புகழ் வேண்டும்” என்று கேட்கவில்லை; 'பொன் வேண்டும்" என்று ஆசைப்படவில்லை; 'போகம் வேண்டும்” என்று சொல்லவில்லே முக்தி வேண்டும்” என்று கூட விண்ணப் பித்துக்கொள்ளவில்லை. x 'அன்னே என நினை.இ நின்அடி தொழுதனெம்; - பன்மாண் அடுக்க இறைஞ்சினெம்; வாழ்த்தினெம்" . "அப்படி எல்லாம் இருப்பவன் நீ என்று நாங்கள் மனத்தால் தியானித்தோம். கின் திருவடியைக் கைகுவித்துத் தொழுதோம். பல முறை மீட்டும் மீட்டும் கீழே விழுந்து வணங்கினுேம் வாயார கின் சீர்பாடி வாழ்த்தினேம்" என்கிரு.ர். "இப்படியெல்லாம் செய்வதற்கு நாங்கள் பெருந்தவம் புரிந்திருக்கவேண்டும். அந்தத் தவத்தின் பயனகவே உன்னே நினைத்தும் வாழ்த்தியும் இறைஞ்சியும் வாழும் வாழ்வு எமக்குக் கிடைத்தது. ஆதலின் யாம் செய்த தவ மாகிய சாதனத்தால் இந்த வழிபாடாகிய சாத்தியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/51&oldid=744416" இலிருந்து மீள்விக்கப்பட்டது