பக்கம்:ஆலைக் கரும்பு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்ட லிங்கம் 65 அந்த லிங்கத்துக்கு மானசிகமாகப் பூசை செய்யத் தொடங்கினர். இந்த அண்டலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்யவேண்டுமே; அதற்கு நீர் எங்கே என்று அவர் கண்கள் தேடுகின்றன. “அதோ, அதோ!" என்று கண்டு பிடித்துவிடுகின்றன. ஓவென்ற இரைச்சலோடு அஆலகள் மேலும் கீழும் எழும்பி விழுந்து கரையிலே மோதும் கடல் அவர் கண் பார்க்கும் எல்லேக்குள் இருக்கிறது. * 'அண்டலிங்கமாகக் காட்சியளிக்கும் சிவலிங்கப் பெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்காகவே தண்ணிரைத் தேக்கி வைத்துக்கொண்டிருக்கும் மஞ்சனசாலையல்லவா இந்த நீர்க்கடல்?” என்று வியந்தார். கிண்ணத்தில் நீர் எடுத்து அபிஷேகம் செய்வது முதல் ஏரியில் நீர் எடுத்து வந்து திருமஞ்சனமாட்டுவதுவரைக்கும் நாம் கண்டிருக் கிருேம். திருமூலரோ மிக மிகப் பெரிய சிவலிங்கத்தைக் கண்டார். அதற்கு அபிஷேகம் செய்வதற்குரிய திருமஞ்சன நீரையும் கண்டுவிட்டார். கிண்ணத்திலிருந்து உத்தரணி யில் எடுத்துப் படிக லிங்கத்துக்கு அபிஷேகம் செய்கிருேம். கொப்பரையிலிருந்து செம்பில் எடுத்து அபிஷேம் செய் கிரு.ர்கள். குளத்திலிருந்தும் ஏரியிலிருந்தும், குடங்களில் நீர் எடுத்துப் பெரிய சிவலிங்கங்களுக்கு அபிஷேகம் செய் கிருர்கள். இந்த அண்டலிங்கத்துக்குக் கடல் நீரைச் செம்பிலும் குடத்திலும் மொண்டு ரோட்டினல் முடிகிற காரியமா? கடலில் இருக்கிற நீரை எப்படிக் கொண்டு போய் எப்படி அபிஷேகம் செய்வது கங்கைகொண்ட சோமுேசுவரருக்கே சாரம் போட்டு அபிஷேக நீரை மேலே கொண்டுபோய் விடுகிருர்கள். இந்த அண்டலிங்கேசுவர ருக்கு யார் எப்படிக்கொண்டுபோய் அபிஷேகம் செய்வது? ஆலுைம் அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் நடக்கத் தான் நடக்கிறது. பூமியாகிய ஆவுடையாரின் மேல் உள்ள

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆலைக்_கரும்பு.pdf/71&oldid=744438" இலிருந்து மீள்விக்கப்பட்டது