உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

□ 41

மற்ற உண்மைகளின் தொடர்பும் அன்று என்று கூறமுடியாது விஞ்ஞானத்தின் கணக்கியல் விதிகளை.

அறிவியல் என்றால் என்ன? மனித மனத்தின் ஊற்றுகளிலே வெளிப்படும் ஓர் அருஞ்சுவை தண்ணீர் போன்ற சக்தி பெற்றதே அறிவியல் எனப்படும். எடுத்துக்கொண்ட விஞ்ஞானத் துறைகளுக்கேற்ற சிந்தனையின் பயனாக, அத்துறையிலே எவ்வளவு தூரம் ஆய்வாளன் மனம் பக்குவப்பட்டதோ, அந்த அளவில் தோன்றிக் கொண்டே இருக்கும் கருத்துக்களின் ஊற்றல்ல; ஊற்றுக் கண்களே அறிவியல்.

பெளதிகம் எப்போது உலகில் பிறந்தது? ஒரு பொருளின் பொருண்மைகள், வேகம் அல்லது விசை போன்றவற்றின் உண்மைகள் எப்போது ஆய்வாளன் ஒருவனால் கண்டறியப்பட்டதோ, அப்போதே பெளதிகம் என்ற ஒரு விஞ்ஞானம் தோன்றிவிட்டது என்று கூறலாம்.

நாம் பிறந்து வளர்ந்து, வாழ்ந்து இறக்கப்போகின்ற உலகில், நமது தோற்றத்திற்கும் அழிவுக்கும் இடையில், இந்த மேதினியின் மேன்மைகளை, அண்டத்தினுள் அடங்கிக்கிடக்கும் அறிவியல் கூறுபாட்டு உண்மைகளை தெரிந்துகொள்ள வகுக்கப்பட்ட கொள்கைகளின் வரம்புகளே இன்றும் நமக்கு துணைபுரிகின்றன எனலாம்.

எடுத்துக்காட்டாக, ஒளி என்ற வெளிச்சத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வரம்புக்கு அடிப்படை அமைத்தவர் கலிலியோ Galilio என்ற மேதை. அவர் என்ன பாடுபட்டார் இந்த மக்களின் மடமையிடையே மாட்டிக் கொண்டு என்பதை தனி ஒரு நூலாகத்தான் எழுத வேண்டும்-பாவம்!

கலிலியோ என்ற அந்த வானியல் ஞானியின் பிரச்னைக்கான முடிவை ஆய்ந்தறிந்து அறிவித்ததை விட,

ஆ-4