பக்கம்:ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54 □

ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின்


ஐன்ஸ்டைனின்
ரயில் வண்டி

எடுத்துக்காட்டாக, நாம் சென்னையிலே இருந்து திருச்சிக்கு நேரான பாதையிலும் சராசரியான சம வேகத்திலும் போகும் ரயிலில் ஏறி உட்கார்ந்து பயணம் போவோம்.

போகும் வழியில் ஆற்றுப் பாலங்கள், மலைக்குன்றுக் காட்சிகள், மேடு பள்ளப் பயணங்கள், பசுமையான வயல் காட்சிகள் மீது கவனம் செலுத்தாதீர்கள்.

ரயில் உள்ளே உட்கார்ந்து உள்ளிருக்கும் பொருட்கள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை, ஓடாத ஒரு ரயிலோடு ஒப்பிட்டுப் பார்ப்பதே நமது நோக்கமாகும்.

நிலையான ஒரு வண்டியில் உள்ள பொருட்கள் இயங்குவதைப் போன்றே நேரான பாதையில் சமச் சீரான வேகத்தில் செல்லும் வண்டியினுள் உள்ள பொருள்களும் இயங்குகின்றன என்று நமது அனுபவம் தெரிவிக்கின்றது.

ஓடும் வண்டியில் உட்கார்ந்தபடியே, ஒரு சிறிய பந்தை உயரே எறிந்து பிறகு பிடியுங்கள். மேலே போன பத்து நேரான பாதையிலேயே உங்களுடைய கைகளில் வந்து விழும்.

சீரான சம வேகத்தில், நேரான பாதையில் செல்லும் வண்டி, தனது திசையை வளைத்து மாற்றும் போதோ, அல்லது தனது வேகத்தை மாற்றும் போதோ, ரயிலின் ஆட்டங்களுக்கு ஏற்றவாறு நாமும் ஆடித் தானாக வேண்டும்.

மாறா நிலைக்
கொள்கை


வெளியிலிருந்து விசை ஒன்றால் தாக்கப்படாத வரையில், ஒரு பொருள் நிலையாய் இருந்தால் அந்த நிலை-