பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/107

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

105


"அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று"

(பதவுரை) அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை = அறம் அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டதெல்லாம் இல்வாழ்க்கைதான்; அஃதும் = அப்பேர்ப்பட்ட சிறப்புடைய இல்வாழ்க்கையும், பிறன் பழிப்பது இல்லாயின் = பிறன் எவனும் பழிப்பதற்கு இடமில்லாதிருக்குமானால் தான், நன்று = நல்லதாகும் - சிறந்ததாகும். (அறன் - அறம்)

(மணக்குடவர் உரை) அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அதுவும் நன்றாவது பிறனொருவனாற் பழிக்கப் படுவதொன்றை யுடைத்தல்ல வாயின். பழிக்கப்படுவதென்றது இழிகுலத்தாளாகிய மனையாளை.

(பரிமேலழகருரை) இருவகை யறத்தினும் நூல்களான் அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; ஏனைத் துறவறமோவெனின், அதுவும் பிறனாற் பழிக்கப்படுவதில்லையாயின், அவ்வில்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று.

(விளக்கவுரை) 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை' என்பதற்கு வாடிக்கையாக ஏதேதோ பொருள் சொல்வது வழக்கம். இல்லறம், துறவறம் என அறம் இருவகை; அவற்றுள் இல்லறமே சிறந்தது என்னுங் கருத்தில் பரிமேலழகர் எழுதியுள்ளார். இன்னும் எத்துணையோ அறங்கள் (முப்பத்திரண்டு அறங்கள்) சொல்லப்படுவதுண்டு; அவற்றுள் இல்லறமே சிறந்தது என்றெல்லாம் சொல்லுவதுண்டு. இங்கே நான் என்ன சொல்லுகிறேன்? அறமே இல்வாழ்க்கை - இல்வாழ்க்கையே அறம்; கரும்பே கன்னல் - கன்னலே கரும்பு என்பது போல, அகராதி தொகுப்பவர்கள், அறம் என்பதற்கு நேரே இல்வாழ்க்கை எனவும்,