பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

ஆழ்கடலில்உடன்பாடாகில் உணவும் அளிக்கலாம். செய்யப்பட வேண்டிய தொன்றுதானே இஃது! இன்றும் நாட்டில் நடைபெறுகின்றதே இத்தகைய நிகழ்ச்சி! அன்றியும், புதிதாக வந்த இடத்தில் குறிப்பிட்ட சிலரைத் தவிர ஏனையோர் என்ன செய்ய முடியும்? ஊரார் உதவி இருந்தே தீர வேண்டும். இத்தகைய புதியோரைத் துறந்தார் என்று சொல்ல முடியுமா? அல்லது, துவ்வாதவர் என்றுதான் மொழிய முடியுமா? முடியவே முடியாதே? உண்மையான விருந்தினர் என்பவர் இப்புதியோரே? இன்னும் சிலர் (பிரயாணம்) வழி நடந்து செல்கின்றார்கள். அவர்கள், வெய்யில் கடுமையாகக் காயும் நேரத்திலோ, இரவிலோ, மழைபெய்யும் நேரத்திலோ வழியில் உள்ள ஓர் ஊரில் தங்கிவிடுவார்கள். அவர்களும் அவ்வூரார்க்கு விருந்தினரேயாவர். ஏன்? இப்புதியோர், ஊராரின் உதவியின்றித் தம் கைப்பணத்தைக் கொண்டு தம்மைத்தாமே காப்பாற்றிக் கொள்ள முடியாதா என்று சிலர் ஐயுறலாம். இங்கொரு செய்தியை நினைவுபடுத்தினால் இவ்வையத்திற்கு இடமிருக்காது, அஃதென்ன?

புகைவண்டி, ‘மோட்டார்’, வான ஊர்தி முதலியவற்றின் மூலமாக வழி கடப்பது இந்தக் காலம்; பெரும்பாலும், கட்டை வண்டி, கால்நடையின் மூலமாக வழி கடந்தது அந்தக்காலம். தம்மூரில், தம் வீட்டில் காலை உணவு உண்டு, பின் தொலைவில் உள்ள வெளியூர்கட்குச் சென்று வேலையை முடித்துக் கொண்டு தம் வீடு திரும்பி வந்து அடுத்த வேளை உணவு உண்ணுவது இந்தக்காலம்; கட்டு சோறு கட்டிக்கொண்டு நாட் கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் வெளியூர் சென்று மீண்டது அந்தக்காலம்; கண்ட இடங்களில், கண்ட நேரங்களில், கண்ட உணவுச்சாலைகட்குள் புகுந்து காசை இறைத்து வயிற்றை நிரப்புவதற்கு வாய்ப்பு மிகமிகக் கிடைக்கப்