பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

ஆழ்வார்களின் ஆரா அமுது


எவ்வளவு அன்பு அபிநயித்துக் காட்டினாளோ, அவ்வளவு அன்பைக் கண்ணனும் £) ; డచ్గా r . ఢ பாவனையில் அபிநயித்தமை தோற்ற உகந்து முலையுண்பாய் போல’ என்கின்றார். ஈற்றடியிலுள்ள ஆனமையால் என்பதை இரண்டாம் அடியில் உண் என்றாள்' என்பதை அடுத்துக் கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும்.

  • அலைபண்பால் - இதன் அருமையான பொருள்

சிந்தித்து மகிழத்தக்கது. பண்பாவது, குணம்; அலை யெறிகின்ற குணம் என்றது, அளவு கடந்த குணம். (மெய்யான அன்போடு வராவிட்டாலும், மித்திரன் என்கின்ற பாவனை கொண்டு வந்தாலும் அன்னவனையும் நான் எவ்விதத்திலும் விடமாட்டேன்) என்று உறுதியாகச் சொல்லியுள்ள எம்பெருமான் அன்பொழுகும் பாவனை யோடு வந்த பேய்ச்சியையும் கொன்றது ஏன்? என்றால்: 'அவளைக் கொன்று உலகுக்கு ஒருயிரான தன்னைக் காப்பாற்றிக் கொள்வதானது உலக முழுமைக்கும் உயிரளித்ததாக ஆகின்றபடியால், இந்தப் பெருங்குணத்தை வெளியிடவேண்டியே அவளைக் கொன்றான் என்பதை உளங் கொள்ளவேண்டும்'. இக்கருத்தையே, மேகனாகக் கொண்டுஎடுத்தாள் மாண்டிஆய கொங்கை அகன்ஆர உண்பன் என்று a sing.” என்று பிறிதொரு பாசுரத்திலும் காட்டுவார். புறவேடத்தைக் காட்டிலும் ஆன்ம குணங்களே ஆண்டவனுக்கு உகப்பானவை.

  • * * * * * * * * * * * ............. - அறந்தாங்கும்

மாதவனே!! என்னும் மனம்படைத்து, மற்றவன்பேர் ஒதுவதே காவினால் உள்ளு." 68. இரண். திருவந், 29 69. டிெ.44