உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

ஆழ்வார்களின் ஆரா அமுது


குறியதா மேனி யாய கூணியாற் குவவுத் தோளாய் வெறியன வெய்தி நொய்தின் வெந்துயர்க் கடலின் வீழ்ந்தேன் ** என்ற பாடலில் இந்திகழ்ச்சி சுட்டப் பெறுவதைக் காணலாம். (3) ஒரு பாசுரத்தில் தன் பிறப்பைப்பற்றிக் கூறு கின்றார். குலங்களாய ஈரிரண்டில் பிறக்கவில்லை என்றும் புலன்களை வெல்லவில்லை என்றும் தம்மைப்பற்றிய குறிப்புகளைத் தருகின்றார். இதனை முன்னரும் குறிப் பிட்டேன். (4) ஒரு பாசுரத்தில் ஆழ்வாரின் தமிழ்ப்பற்று வெளிப் படுகின்றது. -விதையாக நற்றமிழை வித்தியென் உள்ளத்தை விேளைத்தாய் கற்றமொழி யாகிக் கலந்து. * என்ற பாசுரப்பகுதியில் இதைக் காணலாம். நெஞ்சில் நினைக்கவும் முடியாத ஞானசக்திகளையுடையவனான நீ என்னுடைய வாக்கில் வரும் சொற்களுக்குப் பொருளாய் இருந்துகொண்டு என்னுடைய நெஞ்சமாகின்ற நிலத்திலே தமிழாகின்ற விதையை விதைத்துப் பக்தியாகின்ற பயிர் செழித்து விளையும்படி செய்தனையாதலால், நான் நில முடையேனாயினேன்' என்கின்றார். இதை நினைந்து எம்பெருமானைன் பக்தியுழவன் என்றே திருநாமம் இட்டு மகிழ்கின்றார். 42. கிட்கிந். அர்சிடில் 11 43. திருச். விருத். 90 44. நான். திருவந். 81