பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/300

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குலசேகரப் பெருமான் 25? விளிக்கின்றாள். வல்வினையேன்: நீ என்னை ஒருத்தி யையே விரும்பி மற்றை யோரைக் கண்னெடுத்துப் பாராம விருப்பதற்கு உறுப்பான பாக்கியமற்ற நான் என்பது கருத்து. பாசுரத்தின் பொருள் வெளிப்படை. இன்னொரு ஆய்ச்சி பேசுவது: பையரவுப் பள்ளி கானே! நின் மாய வலையில் மாட்டுவதற்கு முன்மாதிரி ஏமாந்தவர்கள் அல்லேம். நீ விரும்பத்தக்கவர்களாக மையணிந்து மான்போல் அழகிய கண் படைத்த பெண்டிர் களும் அல்லேம், காலதாமதம் செய்து எமது இல்லத் துக்குப் போதருவதை இனி விட்டிடு. நின் அழகிய பீதக ஆடையையும் திருமுக மண்டலத்தையும் செங்கனி வாயையும் திருக்குழலையும் கண்டு அவற்றில் ஈடுபட்டு உன் பொய் மொழிகளில் ஒருநாள் பட்டபாடு எங்கட்குப் போதும்; வஞ்சக மொழிகளை மீண்டும் கூறாமல் உன் காதலிமார்களிடம் சென்று சேர்க" (7) என்கின்றாள். பின்னும் ஒர் ஆய்ச்சி பேசும் பாசுரம் இது: என்னை வருக எனக்கு றித்திட்டு இனமலர் முல்லையின் பந்தர் நீழல் மன்னி அவளைப் புணரப் புக்கு, மற்று என்னைக் கண்டு.ழ றாகெ கிழ்ந்தாய் பொன்னிற ஆடையைக் கையில் தாங்கிப் பொய்யச்சம் காட்டு போதி யேலும் இன்னமென் கையகத்து ஈங்கு ஒருநாள் வருதியேல், என்சினம் தீர்வன் நானே. (8) (உழறா - கலங்கி1 பாசுரத்தின் பொருள் வெளிப்படை. என் சினம் தீர்வன் நானே' என்கின்ற இடத்தைத் திரு அரங்க திரு அத்யய நோத்ஸ்வத்தில் உய்ந்த பிள்ளை' என்பாரோடு அபிநயம் பிடிக்கும்போது கையாலே அடிப்பதும் காலாலே துவைப்பது மாய் அபிநயித்தார் அரையர். அதாவது - மறுபடியும் நீ என் கையில் அகப்படும்போது உன்னை நான் கையா 17