பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/326

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குலசேகரப் பெருமாள் 283 இப்போது கூறப்போகும் எடுத்துக்காட்டு நாம் நன்கு. அறிந்த ஒன்றே. எவ்வளவோ காலம் முகிற்கூட்டங்கள் மழைபொழியத் தவறினாலும் நிலத்திலுள்ள பைங்கூழ்கள் கருநிறங்கொண்ட அம்மேகங்களையே எதிர்நோக்கி இருக்கும். அப்பயிர்களைப் போலவே நாம் அதுபவிக்கும் துன்பங்களை இறைவன் போக்காவிடினும் அவனது அடிமைகளாகிய நாம் அந்த இறைவனிடத்திலேயே நம் மனத்தைச் செலுத்துகின்றோம். இதோ ஆழ்வார் Lirror th: எத்தனையும் வான்வறந்த காலத்தும் பைங்கூழ்கள் மைத்து எழுந்த மாமுகிலே பார்த்திருக்கும் மற்றவையோல் மெய்த்துயர்வீட் ட்ாவிடினும் வித்துவக்கோட் டம்மா! என் சித்தம் மிக உன்பாலே வைப்பன் அடியேனே (7). இபைங்கழ்கள்-பயிர்கன்; மைத்து-கருநிறங்கொண்டு: மெய்த்துயர்-தவறாது அதுபவிக்கும் துன்பம்: சித்தம்-மனம்; என்பது ஆழ்வார் பாசுரம். இதை வாய்விட்டுப் பாடி அநுபவிக்க வேண்டும். உலகத்து உயிர்கட்கெல்லாம் பரமான்வே வாழ்வின் அடிப்படை என்பது இப்பாசுரத்தால் தெளிவாகின்றது. நாங்கள் திருக்கோயில் பெருமானைச் சேவிக்கச் சென்ற போது (1968) அருகிலுள்ள பம்பைநதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஒடிக் கொண்டிருந்தது. அந்தக் காட்சி இன்னும் நினைவில் பசுமையாகவே உள்ளது. இந்தக் காட்சி பாசுரப் பொருள் தெளிவாகத் துணை நிற்கின்றது. இந்த ஆறும் இதனைப் போன்ற பல ஆறுகளும் பல இடங் களிலும் பரந்து ஒடி ஆழ்கடலில் சேருமேயன்றி வேறிடத்தே புகா, இந்த ஆறுகள் போலவே இறைவனுடைய அநந்தி