குலசேகரப் பெருமாள் 285 நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்போல் மாயத்தால் மின்னையே சேர்திகிரி வித்துவக்கோட் டம்மா! நின்னையே தான்வேண்டி நிற்பன் அடியேனே (9). |நீள் செல்வம்-அதிக செல்வம்; திகிரி-சக்கராயுதம். என்பது பாசுரம். இதனைப பாடிப் பாடி உள்ளம் உருக வேண்டும். இதில் சீவான்மா பரமான்மாவின் உடைமை' (ஸ்வஸ்வாமி சம்பந்தம்) என்ற உண்மை வெளிப்படுவதை அறிகின்றோம். அனைத்திந்திய கீழ்த்திசை மாநாட்டிற்கு வத்த ஆடியேனை (1969) கல்கத்தா பாரதி தமிழ்ச் சங்கம் அழைத்து ஆழ்வார் பற்றிப் பேசப் பணித்தமைக்கு என் மனம் கனிந்த நன்றி. இதனால் கரும்பு தின்னக் கூவி தருவது போல் இந்த வாய்ப்பு பாசுரங்களை உரக்கச் சிந்திக்க வாய்ப்பளித்தது. இத்தகைய பெருமை வாய்ந்த குலசேகரப் பெருமாளை, அஞ்சனமா மலைப்பிறவி யாதரித்தோன் வாழியே! அணியரங்கர் மணத்துணை யடைந் துய்த்தோன் வாழியே! வஞ்சிநக சந்தன்னில் வாழவந்தோன் வாழியே! மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தோன் வாழியே! அஞ்சலெனக் குடம்பாம்பில் அங்கையிட்டான் வாழியே! அநவரதம் இராமகதை அருளுமவன் வாழியே! செஞ்சொல்மொழி நூற்றஞ்சும் செப்பினான் வாழியே! சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே!88 என்று வாழ்த்துகின்றது வைணவ உலகம் என்று கூறி இப்பொழிவைத் தலைக்கட்டுகின்றேன். நன்றி, வணக்கம். 33. அப்புள்ளை, வாழித்திருநாமம் - 6
பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/328
Appearance