பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5.நாடும் மக்களும் நலம் பெற

112


அறம் பொருள் இன்பம் வீடு என்னும் புருஷார்த்தங்களில் வீடு என்னும் மோட்சத்தை, முழு விடுதலையை இந்த உலகத்திற்குக் கொண்டு வருவேன் என்று பாரதி குறிப்பிட்டார். பரமபதத்தை இந்தப் பூலகிற்கே நம்மாழ்வார் கொண்டு வந்து விட்டார்.

ஈசனை சரணாகதி அடைந்து இகலோகத்தில் மோட்ச சாம்ராஜ்யத்தை எய்தி நிகரற்ற ஆனந்தக் களியில் மூழ்கி வாழும் படி வழி காட்டுவதே பகவத் கீதையின் முக்கிய நோக்கம். என்று பாரதியார் தனது பகவத் கீதை தமிழ் மொழி பெயர்ப்பு நூலுக்கு எழுதிய தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். நம்மாழ்வாரின் பாடல்களிலும் அக்கருத்தைக் காண்கிறோம்.

அமரத் தன்மையும் எய்தவும்

இங்கு நாம் பெறலாம் இஃதுணர்வீரே!


என்றும் பாரதி குறிப்பிடுகிறார்.


பொலிக! பொலிக! பொலிக !

போயிற்று வல்லுயிர்ச் சாபம்

நலியும் நரகமும் நைந்த

நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை

கலியும்கெடும் கண்டு கொள் மின்,

கடல்வண்ணன் பூதங்கள் மண் மேல்,

மலியப் புகுந்து இசைப் பாடி

யாடியுழி தரக் கண்டோம்

(திருவாய்மொழி 5-2)


என்று நம்மாழ்வார் பாடுகிறார்.

கடல் வண்ணனுடைய பூதங்கள் மண்மேல் இந்தப் பூவுலகில் திரண்டு ஒன்று கூடி ஆடியும் பாடியும் வருகிறார்கள். எனவே கலி