பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ.சீனிவாசன்

113


ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 113 நீங்கி விடும் இந்த மண்ணுலகமே விண்ணுலகமாகி விட்டது என்று ஆழ்வார் குறிப்பிடுகிறார். இன்னும்,

திரியும் கலியுகம் நீங்கித்

தேவர்கள் தாமும் புகுந்து

பெரிய கிருத யுகம் பற்றிப்

பேரின்ப வெள்ளம் பெருக

கரியமுகில் வண்ணன் எம்மான்

கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்

இரியப் புகுந்திசை பாடி

எங்கும் இடம் கொண்டனவே!

(திருவாய்மொழி 5-2)


என்று ஆழ்வார் பாடுகிறார்.

கலியுகம் நீங்கி விட்டது. பெரிய கிருதயுகம் வந்து விட்டது. கடல் வண்ணனுடைய அடியார்கள் இசை பாடி உலகமெல்லாம் நிறைந்து விட்டனர். தேவர்களும், இம்மண்ணுலகத்திற்கு வந்து விட்டனர். நோய் நொடி பகை பசி முதலிய தீயனவெல்லாம் இவ்வுலகிலிருந்து நீங்கி விட்டன. திருமாலின் தொண்டர்கள் நிறைந்து நல்லிசை பாடியும், துள்ளியாடியும், ஞாலம் முழுதும் பரவிக் குவிந்து விட்டனர். இன்னுமுள்ள பாக்கியிடங்களிலும் கண்ணனுடைய கூட்டம் நிரம்பி விட்டால் கலியுகம் என்பதேயில்லை என்று ஆகி விடும் என்று ஆழ்வார் கூறுகிறார்.

மிக்க உலகுகள் தோறும்

மேவிக் கண்ணன் திருமூர்த்தி

நச்சு பிரா னோட யனும்

இந்திரனும் முதலாக