பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5.நாடும் மக்களும் நலம் பெற

114


தொக்க அமரர் குழாங்கள்
        எங்கும் பரந்தன தொண்டீர்
ஒக்க தொழுகின்றிர் ஆகில்
        கலியுகம் ஒன்று மில்லையே!

என்று ஆழ்வார் சடகோபன் பாடுகிறார்

பாரதியார் தனது பாடல்களிலும் கலி நீங்கிக் கிருதயுகம் வருவதாகப் பாடுகிறார்.

வீழ்கக் கலியின் வலியெலாம்
கிருதயுகம் தான் மேவுகவே!

என்று பாரதி கூறுகிறார். இன்னும்,

மெய்க்கும் கிருத யுகத்தினையே
கொணர்வேன் தெய்வ விதி யஃதே!

எனவும்,

..................பாரிடை மக்களே!
கிருதயுகத்தினைக் கேடின்றி நிறுத்த
விரதம் நான் கொண்டனன்

என்றும்

கற்ற பல கலைகள் எல்லாம் – அவள்
கருணை நல்லொளி பெறக் கலி தவிர்ப்போம்

எனவும்

சத்தியயுகத்தை அகத்தில் இருத்தித்
திறத்தை நமக்கு அருளிச் செய்யும் உத்தமி!

என்றும்