பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும்-அ.சீனிவாசன்

115


இடிபட்ட சுவர்போல கலிவிழுந்தான்
கிருதயுகம் எழு மாதோ!

என்றெல்லாம் மகாகவி பாரதியார் குறிப்பிட்டுப் பாடுகிறார்.

உலக மக்கள் எல்லாம் எல்லாவிதமான துன்பங்களும் துயர்களும் நீங்கி எல்லா வகையான இன்பங்களையும், நலன்களையும் பெற வேண்டும் என்பதையே குறிப்பிட்டு மகாகவி பாடுவதைக் காண்கிறோம்.

வையத்தலைமை

கண்ணனைப் பாடினால் எல்லாவிதமான துன்பங்களும் தீரும். அவ்வாறு கேடில்லாத புகழ்மிக்க கண்ணனைப் பற்றி சடகோபனார் பாடிய பாடல்களைப் பாடினால் அவர்களுக்கு மூவுலகுக்குமான தனியொரு தலைமை கிடைக்கும் என ஆழ்வார் கூறுகிறார்.

கேடில் விழுப்புகழ்க் கேசவனைக்குரு

கூர்ச் சடகோபன் சொன்ன

பாடல் ஓர் ஆயிரத்துள் இவை பத்தும்

பயிற்றவல்லார்கட்கு, அவன்

நாடும் நகரமும் நன்குடன் காண

நலனிடையூர்தி பண்ணி

விடும் பெறுத்தித்தன் மூவுலகுக்கும்

தரும் ஒரு நாயகமே (திருவாய்மொழி 3-10)


என்று ஆழ்வார் பாடுகிறார்.


சத்திரபதி சிவாஜி பாடலில் மகாகவி பாரதி

பாரத பூமி பழம் பெரும் பூமி
நீரதன் புதல்வர், இந்நினைவகற்றாதீர்