பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5.நாடும் மக்களும் நலம் பெற

116


பாரத நாடு பாருக்கெலாம் திலகம்
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்

என்றும்,

பாரத நாட்டிசை பகரயான் வல்லனோ?
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்

என்று பாடுகிறார்.

பாரதபூமி, நீர் வளமும், நில வளமும், மனித வளமும் நிறைந்த நாடு, பாரத நாட்டின் நீர் வளத்தையும், நில வளத்தையும், மனித வளத்தையும் முழுமையாகப் பயன் படுத்தினால் இந்தியாவைப் போல பத்து இந்தியாவுக்குச் சோறு போட முடியும் என்றும், இந்தியாவைப் போல் பத்து இந்தியாவிற்கு மின்சாரம் கொடுக்க முடியும் என்று நமது நாட்டுப் பொறியியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

நமது மனித வளமும் மனித ஆற்றலும் மகத்தானது. இன்று நமது நாட்டு விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுனர்கள், டாக்டர்கள், கற்றறிவாளர்கள் இல்லாத பணியாற்றாத பல்கலைக் கழகங்கள் உலகில் இல்லை. பல லட்சக்கணக்கான நிபுணர்கள் உலகின் பல நாடுகளிலும் சென்று பணியாற்றுகிறார்கள்.

கல்வித்துறையில், அறிவியல் தொழில் நுட்பத்துறையில், தகவல் தொழில் நுட்பத்துறையில், இதர விஞ்ஞானத் துறைகளில் பொருளாதாரத்துறைகளில் பாரதம் உலகிலேயே முதலிடம் பெற்று உலகிற்கே வழி காட்டியாக உயரும் வாய்ப்பு உள்ளது.

ஆயுத பலத்தாலும், ஆக்கிரமிப்பு மூலம், வன்முறைகள் மூலமல்லாமல் அன்பினால், ஆதரவால், நட்புறவு மூலம், ஒத்துழைப்பு மூலம் உலக நாடுகளின் நன் மதிப்பைப் பெற்று உலக நாடுகளின் தலைவனாக உயர்வதற்குப் பாரதத்திற்கு வாய்ப்பு உள்ளது. இதைப்