பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

117


பாரதி நூறு ஆண்டுகளுக்கு முன்னரேயே தனது நெடிது நோக்குப் பார்வையில் கண்டான். பாரதி தனது புதிய ஆத்தி சூடியில் வையத்தலைமை கொள் என்று நமது இளம் தலைமுறையினருக்கு எடுத்துக் கூறுகிறார். வையத்தலைமை எனக்கு அருள்வாய் என்று அன்னையை வேண்டுகிறார்.

பாரதிக்கு முன்னரேயே நம்மாழ்வார், முவுலகுக்கும் ஒரு தனி நாயகம் கிடைக்கும் என்று பாடியருளினார் என்பதைப் பார்த்தோம்.

திருமங்கையாழ்வார், சீர்காழியை, காழிச்சீராம விண்ணகரம் என்றழைத்து அதில் எழுந்தருளியுள்ள திருமாலைப் பரசுராமனாகவும் இராமனாகவும் பாடி அப்பாடல்களைப் பாடியவர்கள் எல்லா நலன்களும் பெற்று உலகத் தலைவர் ஆவர் என்று குறிப்பிடுகிறார்.

செங்கமலத்தயன் அனைய மறையோர் காழிச்
சீராமவிண்ணகரென் செங்கண் மாலை,
அங்கமலத்தடவயல் சூழ் ஆலி நாடன்
அருள் மாரி அரட்டமுக்கி அடையார் சீயம்,
கொங்குமலர்க் குழலியர் வேள் மங்கை வேந்தன்,
கொற்றேவல் பரகாலன் கலியன் சொன்ன,
சங்கமுகத்தமிழ் மாலை பத்தும் வல்லார்
தடங்கடல் சூழ் உலகுக்குத் தலைவர் தாமே

(பெரியதிருமொழி 3-4)

என்று பாடுகிறார். ஆழ்வாரின் சிந்தனை நோக்கத்தை இப்பாடல் நமக்குத் தெரியப் படுத்துகிறது.

பாரதி தற்காலத்தின் சிந்தனையில் நம்மைக் கொண்டு வந்து விடுகிறார். பாரதி புதிய ஆத்தி சூடியைப் பாடினார். அந்தப் புதிய