பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

133


வஞ்சனை செய்யத் தாயுறுவாகி
           வந்த பேய் அலரி மண் சேர
நஞ்சமர் முலையூடுயிர் செக உண்ட
           நாதனைத்தானவர் கூற்றை என்றும்,
இந்திரனுக் கென்றாயர் களெடுத்த
           எழில் விழ வில் பழ நடை செய்
மந்திர விதியில் பூசனை பெறாது
           மழை பொழிந்திட தளர்ந்து, ஆயர்
எந்த மோடின வா நிரை தளராமல்
           எம்பெருமான் அருளென்ன
அந்த மில் வரையால் மழை தடுத்தானைத்
           திருவல்லி கேணி கண்டேனே!

என்றும் பாடுகிறார்.

இன் துணைப்பது மத்தலர் மகள் தனக்கும்
           இன்பன் நற்புவிதனக் கிறைவன்
தன் துணை யாயர் பாவை நப்பின்னை
           தனக் கிறை மற்றையோர்க்கெலாம்
வன் துணை, பஞ்ச பாண்டவர்க்காகி
           வாயுரை தூது சென்றியங்கும்
என்துணை, எந்தை தந்தை யம்மானைத்
           திருவல்லிகேணி கண்டேனே!

எனவும்