பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் o 168

சிறப்புத்தன்மை அதில் வெளிப்படுகிறது. திவ்யப்பிரபந்தத்தின் நாலாயிரம் பாடல்களில் நம்மாழ்வார்தான் மிக அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். அவர் பாடியுள்ள மொத்தப் பாடல்கள் ஆயிரத்தி இருநூற்றித் தொண்ணுற்றி ஆறாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

இப்பாடல்கள் நான்கு வேதங்களின் சாரமாகக் கருதப்படுகின்றன. நம்மாழ்வார் பாடிய திருவிருத்தம் ரிக் வேதத்தின் சாரமாகவும், திருவாசிரியம் யஜுர் வேதத்தின் சாரமாகவும், பெரிய திருவந்தாதி அதர்வண வேதத்தின் சாரமாகவும், திருவாய் மொழி சாம வேதத்தின் சாரமாகவும் கருதப்படுகிறது.

நம்மாழ்வாரின் பாடல்களைப் பற்றித் தனி ஆய்வு தேவைப்படுகிறது. அவர் கண்ணனைப் பற்றிப் பாடியுள்ள பாடல்களைப் பற்றி மட்டும் இந்நூலில் எடுத்துக் கொள்ளப் பட்டிருக்கிறது. --

திருமாலின் திரு அவதாரங்களிலும், இராமாவதாரமும், கிருஷ்ணவதாரமும் முறையே பூரணாவதாரமும், பரிபூரணாவதாரமும் ஆகும். அதில் கிருஷ்ணாவதாரம் வாழ்க்கையின் அனைத்தளாவிய தன்மைகளையும், அனைத்துப் பரிமாணங்களையும் கொண்டதாக அமைந்துள்ளது. எனவே கண்ணனைப் பற்றிய பாடல்கள் கருத்தாழம் மிக்கதாகவும் அதிகமாகவும் விரிவு கொண்டவைகளாகவும் உள்ளன. ஆழ்வார்களைத் தொடர்ந்து பாரதியும் கண்ணனைப் பற்றி அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம். அடுத்த அத்தியாயத்தில் பாரதி கண்ணனைப் பற்றிப் பாடியுள்ளதை முழுமையாகக் காண்கிறோம்.

திருவிருத்தம்

ரிக்வேதத்தின் சாரம் எனக்கருதப்படும் திருவிருத்தம் நூறு

பாடல்களைக் கொண்டிருக்கிறது. இப்பாடல்கள் நாயகி நாயக பாவத்தின் பாடப்பட்டிருக்கிறது. ஆழ்வார் தன்னை நாயகியாக