பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. கண்ணனைப் பற்றி ஆழ்வார்கள் = 188

“கலக்க வேழ்கடல் ஏழ்மலையுலகே

ழும் கழியக்கடாய்

உலக்கத்தேர் கொடு சென்ற மாயமும்

“மண்மிசைப் பெரும்பாரம் நீங்க வோர் பாரத

மாபெரும் போர்

பண்ணி, மாயங்கள் செய்து சேனையைப்

பாழ்பட நூற்றிட்டுப் போய்

விண்மிசைத் தனதாம மேபுக

மேவிய சோதி தன்தாள்

நண்ணி நான் வணங்கப் பெற்றேன்”

என்று கண்ணனின், லீலைகளை, பெருமைகளை, புகழை, மாயங்களைப் பலவாறாகப்பாடி, நம்மாழ்வார் மகிழ்கிறார். கண்ணனைப் பாடுவதால், தான் நிறைவு பெறுவதாகவும், தனக்கு நிகர் யாருமில்லை என்றும், தனக்கு எந்தவிதத் துன்பமும் நேராது என்றும், தனக்கு எவ்விதத் துக்கமும் கலக்கமும், பகையும் எதுவும் இல்லை என்றும் பாடிப்பாடி மகிழ்ச்சியடைகிறார். H

உண்ணும் சோறு, பருகு நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் என்று திருக்கோளுர் பிரானைக் குறித்துப் பாடுகிறார்.

புள்ளினங்களை, கிளிகளை, வண்டினங்களை, தும்பிகளை, பூவைகளை, பதுமைகளை, பெருநாரைகளை, அன்னங்களை யெல்லாம் ஆழ்வார் தான் நாயகி பாவத்தில் இருந்து கண்ணனிடம் தூது அனுப்புகிறார். தூது அனுப்பியும் கண்ணபிரான் வரவில்லையென்று உரக்கக் கூவி வாராய் வாராய் என்று

எம்பெருமானை அழைக்கிறார்.