பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 195

வன்னெஞ்சத் திரணியனை

மார் விடந்த வாட்டாற்றான்

மன்னஞ்சப் பாரதத்துப்

பாண்டவர்க்காய்ப் படை தொட்டான்

நன்னெஞ்சே! நம்பெருமான்

நமக்கருள் தான் செய்வானே!

என்று நம்மாழ்வார் பிரான் அகம் குழைந்து பாடுகிறார்.

இவ்வாறாக ஆழ்வார் பெருமக்கள், பக்திப் பெருக்கத்துடன் கண்ணனைப் பற்றியும், கண்ணனுடைய பெருமைகளைப் பற்றியும், அருஞ்செயல்களைப் பற்றியும் தத்துவச் செரிவுடனும் தமிழ்ச் சுவையுடனும் பாடியுள்ளார்கள். இவ்வினிய பாடல்களையும், ஆழ்வார்களின் சிறப்புமிக்க கருத்துக்களையும் பாடிப்புரிந்து கொண்ட நாமும் நற்பேறு பெருவோமாக!