பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 211 பார்த்தனின் உயிர்க்காதலி சுபத்திரை. அவளும் பார்த்தனையே மனமார விரும்புகிறாள். அவள் கண்ணனின் தங்கை. அவளைப் பார்த்தனுக்கு மணம் முடித்து வைக்க மூத்த அண்ணன் பலராமன் விரும்பவில்லை எனவே அவளைப் பார்த்தன் கடத்திக் கொண்டு செல்ல வேண்டும். கண்ணன், பார்த்தன் பக்கம். பார்த்தன்-சுபத்திரை விருப்பத்தை நிறைவேற்றக் கண்ணன் உபாயம் சொல்கிறான்.

போரில் கர்ணனை வெல்ல வேண்டும். அதற்கும் பார்த்தனுக்குக் கண்ணன் துணையாகத் தோழனாக இருக்கிறான்.

"பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப் புறங்கொண்டு போவற்கே - இனி என்னவழி யென்று கேட்கில் உபாயம் இருகணத்தேயுரைப்பான் - அந்தக் கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிட காணும்வழி யொன்றில்லேன் - வந்திங் குன்னை அடைந்தனன் என்னில் உபாயம்

ஒரு கணத்தேயுரைப்பான்” என்று

தனது பாடலில் குறிப்பிட்டுக் கூறுகிறார் பாரதியார்.

நாங்கள் காட்டில் சுற்றித் திரிந்துக் கொண்டிருந்தபோது எங்கள் நெஞ்சில் கலக்கமில்லாது செய்து ஆறுதல் அளித்தான் என்றும், பெரும்சேனையின் முன் நின்று போர் செய்யும்போது தேர் நடத்திக் கொடுத்தான் என்றும் எனக்குக் கடுமையான நோய்கள் வந்தபோது அதற்குரிய மருந்துகளைக் கூறுவான் என்றும் எனது நெஞ்சில் கவலைகள் ஏற்பட்டபோது அதற்கான ஆறுதல் சொல்லிக் கவலைகளை மாற்றிவிடுவான் என்றும் கூறுகிறார்.