பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி 212

“கானகத்தே சுற்று நாளிலு நெஞ்சில் கலக்கமிலாது செய்வான் - பெருஞ் சேனைத் தலை நின்று போர் செய்யும் போதினில், தேர் நடத்திக் கொடுப்பான் - என்றன் ஊனை வருத்திடும் நோய்வரும் போதினில் உற்றமருந்து சொல்வான் - நெஞ்சம் ஆஈனக் கவலைகள் எய்திடும் போதில் இதஞ்சொல்லி மாற்றிடுவான்

என்று பாடுகிறார் பாரதி.

பிழைக்கும் வழி சொல்லுமாறு கேட்டால் உழைக்கும் வழி, வினை செய்யும் வழி, பயன் உண்ணும் வழி ஆகியவற்றை ஒரு பேச்சினில் சொல்லி விடுவான். அழைக்கும் போது நொடிப் பொழுதில் வருவான். மழைக்குக் குடையாகவும் பசி நேரத்திற்கு உணவு கொடுப்பவனாகவும், எங்கள் வாழ்வினுக்கு உயிராகவும், எங்கள் கண்ணன் உள்ளான் என்று கூறுகிறார்.

“பிழைக்கும் வழி சொல்ல வேண்டும் என்றால் ஒரு பேச்சினிலே சொல்லுவான் உழைக்கும் வழி வினையாளும் வழி பயன் அழைக்கும் பொழுதினில் போக்கு சொல்லாமல் அரை நொடிக்குள் வருவான் மழைக்குக் குடை பசி நேரத்துணவு என்றன் வாழ்வினுக் கெங்கள் கண்ணன்'

என்று பாரதி பாடுகிறார்.