பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 219

என்றும்,

என்றும்,

“ விந்தை விந்தையாக வெனக்கே - பல

விதவிதத் தோற்றங்கள் காட்டுவிப்பான்

சந்திரன் என்றோரு பொம்மை - அதில்

தண்ணமுதம் போல ஒளி பரந்தொழுகும்,

மந்தை மந்தையா மேகம் - பல

வண்ணமுறும் பொம்மையது மழை பொழியும்,

முந்த ஒரு சூரியனுண்டு - அதன்

முகத்தொளி கூறுதற்கோர் மொழியிலையே!

"வானத்து மீன்களுண்டு - சிறு

மணிகளைப் போல் மின்னி நிறைந்திருக்கும்,

நானத்தைக் கக்கிடவே - மனம்

நாடிமிக முயல்கினுங் கூடுவதில்லை,

கானத்து மலைகளுண்டு - எந்தக்

காலமும் ஓரிடம் விட்டு நகர்வதில்லை,

மோனத்திலேயிருக்கும் - ஒரு

மொழியுரையாது விளையாட வருங்காண்!

“நல்ல நல்ல நதிகளுண்டு - அவை

நாடெங்கும் ஒடி விளையாடி வருங்காண்

மெல்ல மெல்லப் போயவை தாம் - விழும்

விரிகடல் பொம்மையது மிகப்பெரிதாம்,