பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன் 223

கண்ணன் என் தந்தை

கண்ணனைத் தோழனாக, தாயாக, பாவித்துப் பாடிய பாரதி தந்தையாகப் பாவித்து அருமையானதொரு கவிதையை நமக்கு அளித்துள்ளார். இந்தப் பாடல் சிறந்த தத்துவக் கருத்துக்களையும், சமுதாயக் கருத்துக்களையும், சமுதாய சமத்துவக் கருத்துக்களையும் கொண்டதாகும். இப்பாடல்களில் மத வேறுபாடுகளையும், சாதி வேறுபாடுகள் மற்றும் பாகுபாடுகளையும் ஏழை செல்வந்தர் வேறுபாடுகளையும் பாரதி வலுவாகச் சாடியுள்ளார். மக்கள் அனைவரும் இன்பமாகச் சகல செல்வங்களும் பெற்று வாழ்வதற்கான வேண்டுதலைப் பாரதி கண்ணனிடம் சமர்ப்பிக்கிறார். இப்பாடல்களில் பாரதியின் பல லட்சியக் கருத்துக்களும் வெளிப்படுகின்றன. அவருடைய சீரிய கருத்துக்களைப் பாரதி கண்ணனின் வடிவத்தில் எடுத்துக் கூறுவது சிறப்பாகும். இந்தப் பாடல்களை முழுமையாகப் படித்தால் தான் அவைகளின் உட்பொருளை, அவைகளின் சிறந்த கருத்துக்களை நாம் நன்கு புரிந்து கொண்டு முழுமையாக அறிந்து உணர்ந்து பயன் பெற முடியும்.

எனதருமைத் தாய் என்னை இப்பூமிக்கு அனுப்பினாள். இந்த அற்புதமான பூமண்டலத்தில் எனது அருமைத் தம்பிகள் வாழ்கின்றார்கள். அவர்கள் எல்லாம் அவரவர்கள் நியமித்துக் கொண்டுள்ள நெறிமுறைகளின் படியும் பழக்க வழக்கங்களின் படியும் நடை உடைபாவனைகளின் படியும் நெடுவழிகள் அனைத்திலும் உருண்டு கொண்டு, அவரவர்கள் மனம் போனபடி எங்கள் மனித இனத்தாரால் ஆளப்படுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் எனது தந்தையாகிய கண்ணனுடைய

கதைகளைச் சிறிது கூறுவேன் என்று பாரதி தொடங்குகிறார்.