பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்

சேவகரால்பட்ட சிரமம் மிகவுண்டு கண்டீர்

சேவகரில்லா விடிலோ செய்கை நடக்கவில்லை

இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்,

“எங்கிருந்தோவந்தான் இடைச்சாதி நான் என்றான்,

மாடுகன்று மேய்த்திடுவேன் மக்களை நான்

காத்திடுவேன்,

விடுபெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்,

சொன்னபடி கேட்பேன், துணி மணிகள்

துவைத்திடுவேன்

“சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே,

ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்

காட்டு வழியானாலும் கள்ளர்பய மானாலும்

இரவில் பகலிலே எந்நேரமானாலும்,

சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே

சுற்றுவேன், தங்களுக்கோர் துன்ப முறாமற் காப்பேன்,

கற்றவித்தை யேதுமில்லை, காட்டு மனிதன் ஐயே!

ஆன பொழுதும் கோலடி குத்துப் போர் மற்போர்

நானறிவேன், சற்றும் நயவஞ் சனை புரியேன்,

“என்று பல சொல்லி நின்றான்” ஏது பெயர்

சொல் என்றேன்,