பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. கண்ணனைப் பற்றி பாரதி

246

“எவ்வாறேனும் இவனையோர் தொழிலில்

ஒரிடந்தன்னில் ஒரு வழி வலிய

நிறுத்துவோமாயின் நேருற்றிடுவான்

என்று எண்ணி அதற்காகத் தக்க சமயம் வரும் வரை காத்திருந்ததாகவும் அதன்பின் ஒரு நாள் கண்ணனைத் தனது வீட்டிற்கழைத்துத் தனியே கொண்டு போய்,

"மகனே, என்பால் வரம்பிலா நேசமும்

அன்புநீ யுடையை, அதனையான் நம்பி,

நின்னிடம் ஒன்று கேட்பேன், நீயது

செய்திடல் வேண்டும் சேர்க்கையின் படியே

மாந்தர் தம்செயல் எலாம் வகுப்புறல் கண்டாய்”

என்று குறிப்பிட்டுக் கூறி மேலும் தொடர்ந்து,

சாத்திர நாட்டமும் தருக்கமும் கவிதையில்

மெய்ப் பொருள் ஆய்வதில் மிஞ்சிய விழைவும்,

கொண்டோர் தமையே அருகினில் கொண்டு

பொருளினுக்கலையும் நேரம் போக

மிஞ்சிய பொழுதெலாம் அவருடன் மேவி

இருந்திடல் ஆகுமேல், எனக்கு நன்றுண்டாம்

பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும்

அறிவுடை மகனிங்குனையலால் அறிந்திடேன்”

என்று கூறி,