பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனும் "நன்றெனக் கூறியோர் நாழிகையிருந்தான்” பின்னர் "செல்வேன்” என்றான். அதாவது போகிறேன் என்றான். அப்போது கவிஞன் கோபம் கொள்கிறான்.

“சினத்தோடு நானும்,

பழங்கதை யெழுதிய பகுதியொன்றி

னையவன் கையினில் கொடுத்துக்

கவினுற இதனை எழுதுக” என்றேன்

இணங்குவான் போன்று அதைக் கையிலே கொண்டு கணப்பொழுது இருந்தான். பின்னர் “செல்வேன்” என்றான்.

கவிஞருக்கு அச்சொல்லைக் கேட்டுச் சினம் மேலிட்டு,

“ஏதடா சொல்ல சொல் அழித்துறை

க்கின்றாய்? பித்தன் என்றுன்னை

உலகினர் சொல்வது பிழையிலை

போலும்” என்றேன். அதற்கு,

“நாளை வந்து இவ்வினை நட

த்துவேன்” என்றான் கண்ணன்.

அதற்கு கவிஞன்,

“இத்தொழில் இங்கே இப்பொழுது எடுத்துச் செய்கின்றனையா? செய்குவதில்லையா? ஒருரை சொல்” என்று உறுமினேன் என்று பாரதி குறிப்பிடுகிறார். உரையாடல் தொடருகிறது.

“கண்ணனும்”, “இல்லை” யென்றொரு சொல் இமைக்கு முன் கூறினான்.