பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

25

ஆழ்வார்களும் பாரதியும்

ஊனமில் செல்வம் என்கோ!

  ஊனமில் சுவர்க்கம் என்கோ!

ஊனமின் மோக்கம் என்கோ!

ஒளிமணி வண்ணனையே!”

என்று நம்மாழ்வார் பாடுவது சிறப்பாகும்.

செல்வத்தையும் சுவர்க்கத்தையும் மோட்சத்தையும் குறிப்பிடும் ஆழ்வார்பிரான், ஊனமில் என்னும் அடைமொழியுடன் பேசுகிறார். செல்வம் என்பது ஊனமில்லாததாக இருக்க வேண்டும். அதே போல் கவர்க்கமும் மோட்சமும் ஊனமில்லாததாக இருக்க வேண்டும்.

“திறமை கொண்ட தீமையற்ற

   தொழில் புரிந்து யாவரும்

தேர்ந்த கல்வி ஞானமெய்தி

வாழ்வம் இந்த நாட்டிலே! ”

என்று பாரதி பாடுகிறார். தீமையற்ற தொழில் புரிவது என்றே பாரதி குறிப்பிடுகிறார்.

“வேண்டா தனைத்தையும் நீக்கி வேண்டிய தனைத்தையும் அருள்

வதுன் கடனே.”

என்று பாரதி வேண்டுகிறார்.

இன்னும்,

'கோதகன்ற தொழில் உடைத்தாகி” என்றும் "வஞ்சமற்ற தொழில் புரிந்து உண்டு வாழும் மாந்தர்” என்றும் “சக்தி பெற்று நல்ல தொழில் செய்யும்” எனவும் பாரதியார் பாடுகிறார்.