பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3.பள்ளியெழுச்சிப் பாடல்கள்

64


தொழுதுனை வாழ்த்தி வணங்குவதற்குஇங்குன்
தொண்டர் பல்லாயிரம் சூழ்ந்து நிற்கின்றோம்.
விழி துயில் கின்றனை இன்னும் என்தாயே
வியப்பிது காண், பள்ளியெழுந்தருளாயே ”

என்று கவிஞர் பாடுகிறார்.

பறவைகள் எல்லாம் ஆர்ப்பரித்து குரல் எழுப்பிப் பறந்து செல்கின்றன. முரசுகள் ஒலிக்கத் தொடங்கி விட்டன. சங்குகள் முழங்கத் தொடங்கி விட்டன. எங்கு நோக்கினும் சுதந்திர கீதங்கள் ஒலிக்கத் தொடங்கி விட்டன. பெண்கள் எல்லாம் கூட சுதந்திரக் குரல் கொடுத்துத் தெருக்களுக்கு வந்து விட்டார்கள். அந்தணர்கள் ஒதும் வேதங்கள் கூட, பாரதத்தாயே! உனது பெயர்களை உச்சரித்துத் தான் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. அன்னையே, இன்னுமா உறக்கம், எழுந்து வந்து எங்களுக்கு அருள் செய்வாயாக என்று பாரதி பாடுகிறார்.

"புள்ளின ஆர்த்தன, ஆர்த்தன முரசம்
பொங்கிய தெங்கும் சுதந்திர நாதம்
வெள்ளிய சங்கம் முழங்கின் கேளாய்
வீதியெலாம் அணுகுற்றனர் மாதர்
தெள்ளிய அந்தணர் வேதமும் நின்றன்
சீர்த்திருநாமமும் ஒதி நிற்கின்றார்
அள்ளிய தெள்ள முதன்னை எம்அன்னை
ஆருயிரே பள்ளியெழுந்தருளாயே!

என்று கவிஞர் நெஞ்சுருகப் பாடுகிறார்.