பக்கம்:ஆழ்வார்களும் பாரதியும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆழ்வார்களும் பாரதியும் - அ. சீனிவாசன்

81


நிமலன், நின்மலன் நீதிவானவன்
நீள்மதில் அரங்கத்தம்மான் திருக்
கமலபாதம் வந்து என் கண்ணில்
உள்ளன வொக்கின்றதே!”

என்றும்,

" ஆலமாமரத்தினிலை மேல்ஒரு பாலகனாய்
ஞாலமேழும் உண்டான் அரங்கத் தரவின் அணையான்,
கோலமாமணி யாரம் முத்துத்தாமமும் முடிவில்லதோர் எழில்
நீலமேனியையோ, நிறைகொண்டதென் நெஞ்சினையோ ”

என்றும்,

“கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோனணியரங்கன் என் அமுதினைக்
கண்டகண்கள் மற்றொன்றினைக் காணாவே”

என்றும் அமைந்துள்ள அருமையான தேன்சுவைப் பாடல்கள் அதன் பகுதியாகும். திருப்பாணாழ்வாரின் பத்து பாடல்களும் வைணவப் பெருமக்களால் விரும்பிப் பாடப்படுபவைகளாகும்.

தொண்டரடிப் பொடியாழ்வார் பாடியுள்ள திருமாலைப் பாசுரங்கள் திவ்யப் பிரபந்தப் பாசுரங்களுள் முக்கியமான ஒரு பகுதியாகும்.