பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

98 ஆழ்வார்கள காலநிலை கருதியதற்கு ஸ்ரீவல்லபன் என்ற பெயரொற்றுமை ஒன்றைத்தவிர வேறு காரணம் இல்லை. இராயரவர்கள் கூறும் பாண்டியன் பெரியவீரனே யாயினும் பரமவைஷ்ணவனாயிருந்தவன் என்று சொல்லத்தக்கவனல்லன், அன்றியும் இவன் கி. பி. 862-க்கு முன் வாழ்ந்தவன் என்பது இவன் மகன் வரகுணன் சாஸனத்தினின்றும் அறியக்கிடக்கின்றது. ஸ்ரீவைஷ்ணவாசாரியத் தலைவரான ஸ்ரீமந் நாதமுனிகள் பிரசித்தராக விளங்கியது இவனது ஆட்சிக்காலமே ஆகும். பெரியாழ்வாரும் இவர் திருமகளாரும் - இராய ரவர்கள் கருத்தின்படி - இக்காலத்தவரேயானால், இப் பேரடியார்களை அவ்வாசாரியத் தலைவர் நேரில் அறிந்திருக்கவும் அறிந்து அளவளாவியனவும் கேள்வி யுற்றனவுமாகிய வரலாறுகள் அம்முனிகளாலும் அவருடைய சிஷ்யபரம்பரையினராலும் சரித்திர நூல் களிற் பிரபலமாகப் பயின்றிருக்கவும் கூடும். ஆனால் இதற்கு மாறாக, ஆழ்வார்கள் அவதரித்து நெடுங்காலத்துக்குப் பின்பே அங்காதமுனிகள் திருவாய் மொழி முதலாய திவ்யபிரபந்தங்களைப் பெற்றதாகக் குருபரம்பரைகள் கூறுகின்றன. இதனால், அம்முனி களுக்கும் ஆழ்வார்கட்கும் இடையிட்ட காலம் பெரி தென்பது பெறப்படுதலால், அவ்வாசாரிய சிரேஷ்டர் விளங்கிய 9.ஆம் நூற்றாண்டின் இடையில் இருந்த பாண்டியனொருவனைப் பெரியாழ்வார் காலத்தவனாகக் கூறுவது' அசங்கதமாமென்க, அன்றியும், சிற்றன்னவாசற் குடைவரைச் சாஸனங் கூறும் சிரீவல்லுவன் அவனிசேகரன் என்ற