பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெரியாழ்வார் 99 பாண்டியன், 8-ஆம் எண்ணுக்குரிய ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபனே என்றெழுதிய ராயரவர்கள் கருத்தும் பொருத்தமன்று. அச்சாஸனத்துக் கண்ட சிரீவல்லுவன் என்பது ஸ்ரீவல்லபன் என்ற வடபெயரின் திரிபேயாம, சோணாட்டுத் திருவிசலூரிற் கண்ட கல்வெட்டொன்றி னும் இத்திரிபுப் பெயர் கொண்ட பாண்டியனொருவன், முதலாம் இராசேந்திர சோழன் (1011-42) காலத்தவ னாகக் காணப்படுகின்றான்.. இச்சோழன் மகனான வீர ராசேந்திரன், ஸ்ரீவல்லபன் மகனை வென்றவன் என்று அவன மெய்க்கீர்த்தி' கூறுவதும் காண்க. இவ்வாறு திரிந்து வழங்கும் பாண்டியன்பெய ரொற்றுமையை நோக்குமிடத்து, சிற்றன்ன வாசற் சாஸனத்துக் குறிக்கப்பட்டவன் அச்சோழன் காலத்துச் சிரீவல்லுவனின் வேறல்லன் என்ற தோற்றுகின்றான். பெரியாழ்வார்வரலாற்றின்படி, ஸ்ரீவல்லபன் என்ற பெயர் 8-ம் நூற்றாண்டில் அவ்வாழ்வார்காலத்துப் பாண்டியருள் ஒருவற்கு வழங்கி வந்ததே என்பதனைச் சாஸனங்களும் குறிப்பிக்கின்றன. யான் பல வருஷங்கட்குமுன் செந்தமிழ்ப்பத்திரிகையில் எழுதிய கட்டுரைகளிலே, அவ்வாழ்வார் தம்காலத்துப் பாண்டியன் நெடுமாறன் என்ற பெயர்கொண்டவன் என்று குறிப்பிட்டுக் கூறுவதை முதன்முதல் வெளி யிட்டு, அவனே ஆழ்வாரால் அடிமை கொள்ளப்பெற்ற ஸ்ரீ வல்லபதேவனாதல் வேண்டுமென்று எழுதியுள்ளேன். 1. Ep. Rep, 368. of 1914. 2, Ibid; 46 of 1907. 3. தென்னனைச் சிரீவல்லவன்மகன் சிறுவன், மின்னலில் மணிமுடி வீரகேசரியை, மதவரை யொன்றா லுதைப்பித்து” எனக்காண்க.