பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெரியாழ்வார் 101 இவற்றுள் உண்மை யாது என்பது இனிக் கிடைக்கும் சாஸன உதவியாற்றான் தெளிவுபட வேண்டும். நெஞ்சடையன் தந்தையும் ஆழ்வாராற் கூறப்பட்டவனுமான நெடுமாறனுக்கே ஸ்ரீவல்லபன் என்ற மறுபெயருமுண்டாயின், அதுவே பொருத்தம் என்பதில் ஐயமில்லை. அல்வாறன்றி, அவன் மகனுக்கே அஃது உரியதாயின், மாறனுக்குமகன் ஸ்ரீவல்லபன் என்ற பொருளில், மாறன் ஸ்ரீவல்லபன் என நெடுஞ் சடையனுக்கு வழங்கியிருக்கக்கூடிய ஒட்டியற்பெயர் பிற்காலத்திற் பொருள் அறியப்படாமையாலும், தந்தை யும் மகனும் ஆழ்வார்க்கு அடியராயிருந்தமையாலும்மாறனும் ஸ்ரீவல்லபனும் ஒருவன் போலும் என்று கருதப்பட்டு--நெடுமாறனுக்கு வழங்கியதாக வேண்டும் என்க . | பெரியாழ்வார் 85-திருநக்ஷத்திரம் வாழ்ந்தருளியவர் என்பது குருபரம்பரைகளால் அறியப்படுகின்றது. உத்தேசம் 690-ல் இவ்வாழ்வார் அவதரித்தவராயின், 775-வரை இவர் வாழ்ந்த காலமாகக் கூறத்தகும். 767-ல் பட்டம் பெற்றவனாகத் தெரியும் நெடுஞ் சடையன் எத்தனையாண்டுகள் ஆட்சிபுரிந்தவனென்பது பெயராதலின், ஸ்ரீ வல்லபன் என்று ஜினஸேனர் குறிப் பிட்டுக் கூறியது, அதனைற் தன் சிறப்பியற் பெயராகக் கொண்ட தென்னாட்டரசனாகவே கொள்ளற்கு உரியது. அங்ஙனம் பிரபலனாய் அவர் கூறுங்காலத்தில் விளங்கிய தென்னாட்டு வேந்தன் நெடுஞ்சடையனே யாதலின், ஸ்ரீவல்லபப் பெயர் அவனுக்கிருந்ததென்ற ராயரவர்கள் கருத்துப் பெரிதும் ஏற்புடைத்தாதல் காண்க. (Dr. Shama Sastri's-The Epoch of Kuna Pandya --Report of the Third Oriental Conference, pp 223-7.)