பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஸ்ரீகோதையார் 109 என்று இத்தகைய பாசுரங்களால், அக்காமனை விளித்துத் தம் நிலைமைகளை அவன்பால் முறையிடும் அழகு அறிந்து மகிழ்தற்குரிய தாம். “யாண்டீ ராறதில் எழிற்காம னோன்பொடு" என்ற பன்னிருபாட்டியல் விதிப்படி (182), முற்காலத்தே கன்னியர் தம் பன்னிரண்டாம் வயதிற் காமனோன்பு நோற்றுவந்த செய்தி புலனாகும். அம்முறையே, ஆண்டாளும் மணஞ் செய்தற்குரிய தம் இளம்பருவத்தே இந்நோன்பைக் கைக்கொண்டு நடத்திப் போந்தனரென்று கருதல் பொருந்தும். இங்ஙனமே, சுரமஞ்சரி என்ற நங்கை சீவகனை விரும்பி “ தாமரைச் செங்கட். செவ்வாய்த் தமனியக் குழையினாயோர் காமமிங் குடையேன் காளை சீவக னகலஞ் சேர்த்தின் மாமணி மகர மம்பு வண்சிலைக் கரும்பு மான்றேர் பூமலி மார்ப வீவல் ஊரொடும் பொலிய வென்றாள் " என்று கூறி மன்மதனை வேண்டியவாறே (சீவக. 2057).

  • சுவரிற் புராணநின் பேரெழுதிச்

சுறவாற் கொடிகளுந் துரங்கங்களும் கவரிப் பிணாக்களுங் கருப்பு வில்லும் காட்டித்தந்தேன் கண்டாய் காமதேவா அவரைப் பிராயங் தொடங்கி யென்றும் ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள் துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுதுவைத்தே னொல்லை விதிக்கிற்றியே." என்று ஆண்டாள் வேண்டுதல் ஒப்பிடத் தக்கது. இங்ஙனமே,