பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆழ்வார்கள் காலநிலை இன்ன வென்பதையும் அக்காலத்து வைணவசமய மிருந்த நிலைமை இத்தகையதென்பதையும் விளக்க விரும்புகிறேன். இவற்றைக் கூறப்புகுமுன், அவ்வாழ் வார்கள் அவதாரத்துக்கு முன்னிருந்த தென்னாட்டு வைணவசமய நிலைமையை ஆராய்ந்து தெரிந்து கொள்ளுதல் நலம். ஆதலின் அதனை முதலில் நோக்குவோம். வைணவசமயத்தின் பழைமை பெருமைகள் பழைமையும் பெருமையும் வாய்ந்த இப்பரத கண்டத்தில் அநாதியாக.. நிலைபெற்றுள்ள மதங் களிலே, திருமால் சமயமும் ஒன்றென்பதற்கு வேத வேதாங்கங்களும் இதிகாச புராணாதிகளுமே தக்க சான்றாக உள்ளன. இதனை விரித்து விளக்கற்குரிய வடமொழி தென்மொழி நூல்கள் மிகுதியாக உள்ளமை யால், இதுபற்றி நாம் இங்கு ஆராய வேண்டுவதில்லை" அதனால், வடவேங்கடம் தென்குமரிக் கிடைப்பட்ட தமிழகத்தில் வைணவசமயத்தின் பழைய நிலைமை எத்தகையதென்பதே இங்கு நோக்கற்குரியது, தென்னாட்டின் சமய சரித்திரங்களை நீள ஆராய்ந்து செல்லுமிடத்து, திருமாலைப் பரதெய்வமாகக் கொண்டு வழிபட்டுவருங் கொள்கை, அந்நாட்டு மக்களிடம் அநாதியாகவே தோன்றியுள்ளது என்ற முடிபு பெறப் படத் தடையில்லை. முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்று நான்காகப் பகுத்துக்கொண்டு இந்த ஞாலத் துக்கு நானிலம் என்ற பெயரைத் தமிழர் இட்டு வழங்கிய போதே, திருமால் வணக்கமும் இங்கு உண்டாகி விட்டது. தமிழ்ப்பெருமுனிவராகிய அகத்தியரின்