பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

112 ஆழ்வார்கள் காலநிலை நாடுமூரும் அறியவேபோய் நல்ல துழாயலங்கல் சூடிநாரணன் போ.டெமெல்லாஞ் சோதித் துழிதருகின்றான் கேடுவேண்டுகின் றார்பலருளர் கேசவ னோடிவளைப் பாடிகாவ லிடுமினென்று பார்தடு மாறினதே. காறைபூணுங் கண்ணாடிகாணுந் தன்கையில் வளை குலுக்கும் கூறையுடுக்கு மயர்க்குந் தன்கொவ்வைச் செவ்வாய் திருத்தும் தேறித்தேறிநின் றாயிரம்பேர்த் தேவன் திறம்பிதற்றும் மாறின் மாமணி வண்ணன்மேலிவள் மாலுறுகின்றாளே. " கைத்தலத்துள்ள மாடழியக் கண்ணாலங்கள் செய்திவளை வைத்துவைத்துக்கொண் டென்னவாணிபம் நம்மை வடுப்படுத்தும்" " பெருப்பெருத்த கண்ணாலங்கள் செய்து பேணிநம் மில்லத்துள்ளே இருத்துவா னெண்ணி நாமிருக்க இவளுமொன் றெண்ணுகின்றாள் (பெரியாழ்வார் திருமொழி, 3, 7.) என்பன போன்ற பாசுரங்களால் உயர்வும் உருக்கமும் பெறப் பாடுதல் காணலாம். ஆண்டாளும், அழகிய மண வாளனையன்றி வேறு மானிடவர்க்கென்று பேச்சுப் படில் வாழகில்லா'த் தம் நிலைமையைக் கூறி வரும் போது“குமரனார், சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே" (நாய்ச்சியார் திருமொழி, 10, 4.) “திருவரங்கச் செல்வனார், பேசியிருப்பனகள் பேர்க்கவும் பேராவே. (க்ஷ, 11, 8.)