பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

fis ஸ்ரீ கோதையார் பண்ணினார்கள் என்று பெரியோர்கள் எழுதிய ஸ்ரீவசன பூஷணரும் இங்கு அறியத்தக்கது. இங்ஙனமாக எம்பெருமானால் ஆண்டாள் அங்கீ கரிக்கப் பெற்ற பின்பு, வில்லிபுத்தூரேறச் சென்று முன்போலவே திருமால் கைங்கரியபரராய் நெடுங்காலம் வாழ்ந்து வந்த பெரியாழ்வார். தம் நிலைமையைக் குறித்து"தோட்டமில்லவள் ஆத்தொழு ஓடை துடைவையுங் கிணறும் இவையெல்லாம் வாட்ட மின்றியுன் பொன்னடிக் கீழே வளைப்பகம் வகுத்துக்கொண் டிருந்தேன் (பெரியாழ், திருமொழி. 5, 1, 5). என்று அருளிச் செய்யும் பாசுரத்திலே, தம் திரு மகளாரைப்பற்றி அவர் ஒன்றுங் குறிப்பிட்டனரில்லை. இதனாலும், “ஒரு மகள் தன்னையுடையேன்...... செங்கண்மால்தான் கொண்டுபோனான்" என்றதனாலும், பெருமாள் ஆண்டாளை அங்கீகரித்துக்கொண்ட காலத்துக்கும் பின்பே, தம் திருமொழியை அப்பெரியார் பாடியவர் என்பது பெறப்படுகின்றது. இவற்றால், ஆண்டாள் வைபவங்களாகக் கூறப் படுவனவற்றோடு, அவருடையனவும் அவர் திருத்தந்தை யாருடையனவுமாகிய பாசுரங்கள் எவ்வளவு தூரம் ஒற்றுமைப்பட்டுள்ளன என்பது நன்கறியலாகும். இனி, ஆண்டாள் அருளிய மற்றொரு பிரபந்தமாகிய திருப்பாவைப் பாசுரங்கள் முப்பதும், கோகுலத்து ஆயர்குலமகளிர் மார்கழி நீராட்டத்தின் பொருட்டு வைகறைக்குமுன்பே எழுந்து தத்தந் தோழியர்