பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஸ்ரீகோதையார் 127

    இங்ஙனம் முன்னும் பின்னும் ஏறக்குறைய ஒன் றரை நூற்றாண்டுகளாக நிகழ்ந்திராத கிரக நடை யொன்றை ஆண்டாள் குறிப்பிட்டுக் கூறுவதும், அது, பெரியாழ்வார் திருவாக்காலும்சாஸன முதலிய கருவிக ளாலும் அவரது காலமாகத் தெளியப்பட்ட எட்டாநூற் றாண்டின் முற்பகுதியாக அமைந்திருந்ததும் ஈண்டு அறிந்து மக்ழத்தக்கன:
     ஆண்டாளது அவதாரதினம்-களm ஆடிt சுக்கிலசதுர்த்தசியும் செவ்வாய்க்கிழமையுங் கூடின பூரநக்ஷத்திரம் என்று குருபரம்பரைகள் சில கூறுகின் றன, இக்காலக்குறிப்பைக் கொண்டு--776-ஆம் ஜூன்மீ 25s அவ்வடியாரது அவதார காலம்என்று ஸ்ரீமாந் சுவாமிக்கண்ணுபிள்ளையவர்கள் தம் நூலுட் சணித்திருக்கின் றனர்.
    ஆண்டாளுக்கும் மற்ற ஆழ்வார்கட்கும் இவ்வாறு குறிக்கப்பட்டுள்ள வருஷமாசங்களுடன் கூடிய பஞ்சாங்ககாலங்கள், பிற்பட்ட நூல்களிலன்றித் திவ்ய சூரிசரிதம், பின்பழகிய பெருமாள்சீயர் குருபரம்பரை களிற் காணப்படவில்லை. அவற்றிற் குறிக்கப் பட்டவை-ஆழ்வார்கள் அவதரித்த மாதங்களும் நட்சத்திரங்களுமே ஆகும். சிவனடியார்கட்கும் இங்ஙனமே மாதநட்சத்திரங்களன்றி வேறு வழங்காமை ஒப்பிடத்தக்கது.

-. ஆகவே, முன்னூல்களிலே ஆண்டாளுக்குக் கூறப் பட்டுள்ள ஆடி.t" பூரநாளுடன், நள வருஷத்தைமட்டும் இங்கே கூட்டிநோக்குமிடத்து, 8-ஆம் நூற்றாண்டிலே - பிள்ளையவர்கள் கணித்த 776-ஆம் வருஷமேயன்றி, அதற்கு முன்-716-ம் வருஷத்து ஆடிப்பூரமும் அப்