பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

               திருமங்கை மன்னன்

131

      என்று நியமிக்க, அதற்குப் பெரிதும் உவந்து, தாம் இறுத்தற்குரிய பகுதிப் பொருளைக் கச்சியிற் செலுத்து வதாக அரசனுக்கறிவிக்க, காஞ்சிக்கு அழைத்துச் சென்று அப்பகுதிப் பொருளைப் பெற்றுக் கொண்டு இவரைச் சிறைவீடு செய்க' என்று அரசன் ஆணை யிட்டுத் தன் காவலருடன் இவரை விடுவித்தனன்.
       கலியரும், காவலருடன் கச்சிமாநகரடைந்து அங்கே திருமாலருளாற் கிடைத்த பெரு நிதியைச் செலுத்திச் சிறையினின்று விடுதலை பெற்றனர்.

பின், இவர் திருமால் கைங்கரியம் புரிதற்குக் கையிலே வேறு பொருளில்லாமையால், அதன்பொருட் டுத் தமக்குற்ற நண்பர் சிலருடன் தம் குலத்தொழி லாகிய களவில் மூண்டு நிற்கலானார்.

          ஒரு நாள், தம் பதியையடுத்த திருமணங் கொல் லையில், வழிப்பறிக்காக இவர் பதுங்கி நின்றபோது, புதுமணவாளக் கோலத்துடன் பிராமண இளைஞரொரு வர் தம் மணவாட்டியும் பரிவாரங்களும் சூழப் பெருந் திரவியங்களுடன் அவ்வழியே வரவும், அவர்களைக் கண்டு மகிழ்ந்து தங் கூட்டத்தோடும் மேல் விழுந்து அவர்களிடமிருந்த பொருள்களை யெல்லாம் பற்றிக் கொண்டு மூட்டையாகக் கட்டி எடுத்துச் செல்லத் தொடங்கிய வளவில், அது தூக்கவாராமையால் மந்திரவாதம் பண்ணினை போலும்' என்று அம்மண வாளப் பிள்ளையை நெருக்கிக் கேட்க, 'ஆம், உமக்கும் அந்த மந்திரத்தை உபதேசிக்கிறேன், வாரும்' என்று கலியன் கழுத்தை அணைத்து, 'பிதகவாடைப் பிரானார் பிரமகுருவாகி வந்து' திருமந்திரத்தை உபதேசித்த வளவில், பரஞான பரபக்தி மேலீட்டால் தாம் செய்த தொழிலை வெறுத்து எம்பெருமானைப் பலபடியாகப்