பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 141' மேலும், பரமேச்சுரவிண்ண கரம் என்பதற்குப் பரமேச்சுரனால் கட்டிப் பிரதிஷ்டிக்கப்பெற்ற விஷ்ணுக் கிரகம் அல்லது திருமால் கோயில் என்பது பொருளாம்.. நந்திபுர விண்ண கரம், மகேந்திர விஷ்ணுக்ருகம், அதியேந்திரவிஷ்ணுக்ருகம், குலோத்துங்க சோழ விண்ணகர் என்று, பிரதிஷ்டித்த அரசர்பெயர்களால் ---கிராமம்; 'ஐவர்க்கு மைந்து குடிக்காடு நல்குதியோ கூறு" (பெருந்தே, பாரதம். வாசுதேவன் தூது, 173) எனக் காண்க). இனி, நெல்வேலி என்பது இப்பக்கத்துள்ள நெம்மெலி" என்ற ஊராம். இவ்வூர்ப்போர், சபரர் தலைவனான உதயண' னுடன் நடத்தியதென்று சாஸனமும், 'விடைத்திறல் வில்லவ னெல்மெலியில் வெருவ' நடத்தப்பட்டதென்று பரமேச்சுர விண்ணகரப் பதிகமுங் கூறுகின்றன. இங்கு வில்லவன் என்று ஆழ்வாராற் குறிக்கப்பட்டவன் சேரன் அல்லன். க்ஷ பதிகத்தின் முதற்பாட்டில்-வ (ப?)ல்லவன் (சளுக்கன்), வில்லவன் (சேரன்) முதலியோர்பல்லவனுக்கு அடங்கியவராக அவ்வாழ்வார் கூறிவிட்ட மையால், அவ்வில்லவனையே இரண்டாமுறையும் அவர் எடுத்துரைக்க நியாயமில்லை. அதனால், தனக்கடங்காத. பாண்டியனது சேனைத் தலைவருள் அவ்வில்லவனும் ஒருவனாதல் வேண்டும். ஆகவே, (வில்லாளனான) வேடர் தலைவன் என்றேவில்லவன்-என்று ஆழ்வார் கூறியதற். கும்-சாஸனக் கருத்துக்கிணங்கப் பொருள் கொள்ளத் தக்கது, இனி, 'தேம்பொழிற் குன்றெயில் தென்னவனை” என்று, ஆழ்வார் பாடுதற்கேற்ப- பகவதியாற் காக்கப்படும் காளிதுர்க்கத்தை அழித்துப் பாண்டிய சேனையை மண்ணைக் குடியிற் தோற்கச் செய்தவன்” என்று உதயேந்திர சாஸனம் கூறும். இதனினின்று இத்துர்க்கம் பாண்டியனுக்குப், பேரரணாகவிருந்ததென்பது புலப்படத் தடையில்லை.