பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை கடவுளர்வழிபாடுகளினும் சிறப்புடைய தாயிருந்த தென்றே சொல்லலாம்.! அகத்திணையொழுக்கம் தொடங்குதற்கிடமான குறிஞ்சியை ஏனைப்புலவர்போலத் தாமும் முதலில் வைத்துக் கூறாது, திருமாலுக்குரிய முல்லையை முத லாகக் கொண்டு தொல்காப்பியர் எண்ணுதல் ஒரு சிறப்பியல்பு பற்றிய தென்றே கருதத்தகும். இவ்வாறே, மன்னர்க்குத் திருமாலை உவமை கூறும் பூவைநிலை யென்னும் புறத்துறைச்செய்தி கூறுமிடத்தே“ மாயோன் மேஎய மன்பெருஞ் சிறப்பிற் றாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும்” 2 (தொல். அகத். 60.) என்று புருடோத்தமனது இறைமைக்குணங்கள் புலப் படுமாறு பலபட விசேடித்து அவ்வாசிரியர் கூறு தலுங் காணலாம். இப்பெருந் தலைமைபற்றியே மால் என்ற சொல்-பிறர்க்குரித்தாகாத ' நாராயண நாமம் 1. அகத்திணை முறையில் அமைக்கப்பட்ட சங்க நூல் களிலே தொல்காப்பியமும் ஐந்திணையைம்பதும் ஒழிய ஒழிந்தனயாவும், முல்லையல்லாத திணைகளுள் ஒன்றை முதலாகக் கொண்டனவாம். தொல்காப்பியரைப்போலவே, மாறம்பொறையனாரும் “மல்லர்க் கடந்தா னிறம்போன் றிருண்டெழுந்து” எனத்திருமாலை முதலிற் கூறி முல்லைத் திணை தொடங்குதலை அவரியற்றிய ஐந்தினையைம்பது என்ற நூலான் அறிக. 2, “மாயோனைப் பொருந்திய, நிலைபெற்ற பெருஞ் சிறப்பினையுடைய, கெடாத விழுமிய புகழைப் பொருந்திய பூவை நிலை" என்பது இளம்பூரணருரை. இத்தொடர்க்கு வேறு பொருளொன்றை நலிந்து கொள்வர், நச்சினார்க்கினியர்.