பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருவங்கை மன்னன் 171 கொடும்பாளூர்ச்சாஸனத்தால் இரண்டாம் வாதா பியழிவு தெளிவாயும் ஏற்றதாயுமுள்ளபோது, அதனையே சிறுத்தொண்டர்காலத்து நிகழ்ச்சியாகக் கொள்ளத் தடை யாது? என்க. மூன்றாவது: - திருநாவுக்கரசுநாயனாரால் சைன மதத்தினின்று திருத்திக் கொள்ளப்பெற்ற பல்லவன், மகேந்திரவர்மன் என்பது, சரித்திரவறிஞர் முடிபாம், இவனுக்குக்கு ணபரன் என்ற மறு பெயருமுண்டு. இவன் சைனத்தினின்று சைவத்துக்குத் திரும்பிய செய்தியை திருச்சிராப்பள்ளிக் குகைக்கல் வெட்டொன்று குறிப்பிடு. கின்றது. அன்றியும், இவன் சைவசமயஞ் சார்ந்ததும் திருவதிகையிலிருந்த சைனப்பள்ளியை இடித்துத் தன் பெயரால் குணப(த?)ரேச்சுரம் என்ற சிவாலயங் கட்டினன் என்று பெரிய புராணம் கூறும். இப்பல்லவன் உத்தேசம் 600--640-வரை ஆட்சிபுரிந்தவன். அப்பர், சம்பந்தரைச் சந்தித்தபோது வயது முதிர்ந் தவராயிருந்தார் என்றும், 81-ம் வயதில் அந்நாயனார் சிவபத மடைந்தனர் என்றும் சொல்லப்படுகின்றன. 1-ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் அப்பெரியார் அவ தரித்தவராகக் கொண்டால், 600 முதல் 681-வரை அவர் வாழ்நாளாகும். இளைஞரான சம்பந்தரை அவர் சந்தித்து அளவளாவிய செய்திகட்கெல்லாம், ஈண்டுக் குறித்த அவ்விருவர் காலநிலையும் ஏற்றதாக அமைதல் கண்டுகொள்க. இவற்றால், சம்பந்த மூர்த்திகள், 7-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் விளங்கியவர் என்பது தெளிவாகும். 1. S.II. Vol. I, p. 49.