பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

172 ஆழ்வார்கள் காலநிலை இச்சிவனடியார்க்கு 16-வயது கூறப்படுவதால், 1670 முதல் 686-வரை இவர்வாழ்நாளாகக் கொள்வது, மேற்கூறிய சரித்திர நிகழ்ச்சிகட்கெல்லாம் பெரிதும் ஏற்புடையதாகும். இதனை விளக்குமிடத்து விரியுமாதலால், உய்த்தறிந்துகொள்க. இனி, சம்பந்தர் காலத்தவராகத் திவ்யசரித முதலி யவை கூறும் திருமங்கையாழ்வாரும் 7-ம் நூற்றாண் டின் பிற்பகுதியில் விளங்கி யிருந்தவர் என்பது சொல் லாதே அமையும். முன்னரே யான் விளக்கிப் போந்த படி, நந்திவன்மனது ஆட்சியிடையில் (744-754)வாழ்ந் திருந்த இவ்வாழ்வார் சம்பந்தர்க்குச் சமகாலத்தவர் எனவே, அஃது அவர் வாழ்நாளின் முற்பகுதியாகக் கொள்ளத்தக்கது. சம்பந்தர்க்குரியதாக மேற் கூறிய காலம் திருமங் கையார்க்கும் ஏற்றது என்பதன் உண்மையை அவ் வாழ்வார் கூறும் மற்றோர் அரிய செய்தியும் உறுதிப் படுத்துவதாம். அதனை இனிக் கூறுவேன். “வயிரமேகன் தன்வலி தன்புகழ் சூழ்ந்த கச்சி” என்று, தங்காலத்து வேந்தனொருவனை அவனது வீரம் பற்றித் திருமங்கை மன்னன் புகழ்ந்து கூறியவாறே, வேறு வீரர்களையும் தந்திருப்பதிகங்களில்"ஒண்டிறல் தென்னனோட வடவர சோட்டங்கண்டதிண்டிற லாளர் நாங்கூர்" (பெரிய திருமொழி, 4, 5, 6). 1. சம்பந்தமூர் ததிகள் 655-ல் சிவஸாயுஜ்யம் பெற்றவ ராதல் வேண்டும் என்பதற்குப் பல காரணங் கூறுவர், தஞ்சை ராவ்பஹதூா ஸ்ரீமாந் கே. எஸ், ஸ்ரீநிவாஸபிள்ளை