பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

10 ஆழ்வார்கள் காலநிலை முதலிய நிலங்களிலும் பரவுவனவாயின. இவற்றினும், கண்ணபிரான் வழிபாடே மிகுதியும் வழக்குப் பெற்றி ருந்த தென்னலாம். கண்ணபிரானை அப்பிரானது காதற்றேவியாக மேற்கூறிய நப்பின்னைப்பிராட்டி யுடனும், நம்பி மூத்தபிரானான பலதேவருடனும் சேர வணங்கிச் சிறப்பித்துவந்த செய்தி சங்க நூல்களால் நன்கறியப்படும். இஃதன்றிப் பலதேவர்க்குத் தனிக்கோயில்களும் அக்காலத்து அமைந்திருந்தன. “ வால்வளை மேனி வாலியோன் கோயிலும் நீல மேனி நெடியோன் கோயிலும்." (சிலப். 5, 171-2) “ உவணச் சேவ லுயர்த்தோ னியமமும் மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும்.” (க்ஷ 14, 8-9) எனப் புகாரிலும் மதுரையிலும் இருந்த அத்தகைய கோயில்களை இளங்கோவடிகள் குறிப்பிடுதலுங்காண்க, இப்பலதேவர் கோயில், வெள்ளை நாகர் கோட்டம்' 'வெள்ளை நகரம்' என்ற பெயர்பெற்றிருந்தது. இவ்வாறு தனிக்கோயிலிற் பலதேவரை வணங்கிவந்த வழக்கு, கடைச்சங்கத்துக்குப் பிற்பட்டகாலத்தில் இருந்ததில்லையென்றே சொல்லலாம். கண்ணனும் பலதேவரும் ஒன்றுசேர்ந்துள்ள கோலத்தை அக்காலத்துப்புலவர் வணக்கமுகத்தானும்" 1. சிலப். 5, 171-2; 9, 10. 2. 'பொற்பனை வெள்ளையை யுள்ளா தொழுகின்னா. சக்கரத்தானை மறப்பின்னா' (இன்னா. 1) “மாயவனுந்