பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

.210 ஆழ்வார்கள் காலநிலை அரசர்கள் பட்டப் பெயராக பல்லவர்களுள்ளே பர்மபாகவதர்களான அரசர் சிலர் பப்ப பட்டாரக பாதபக்த' என்றிவ்வாறு விசேடிக்கப் படுகின்றனர். பப்ப பட்டாரகருடைய பாதங்களில் பக்தியுடைய' (இன்னார்) என்பது இத்தொடரின் பொருள், இதனினின்றும், அரசர்க்கு ஞானாசாரியராய் விளங்கிய பெரியோர் சிலர்க்கு இப்பெயர் முன்பு வழங்கி வந்ததென்பது தெரியலாம். ஒருசாரார், பப்ப பட்டாரகர் என்பது அரசரது முன்னோரைக் குறிக்க வழங்கிய பெயராகவே கருதுவர். ராஜருஷிகளாகவும் அடியார்களாகவும் விளங்கிய அரச முன்னோர் சிலர்க்கு அப்பெயர் வழங்கியிருப்பது உண்மையே. அதுபற்றி, அவ்வழக்கு அவர்கட்கே உரியதென்பது பொருத்தமன்று. தெள்ளாறெறிந்த மூன்றாம் நந்திவர்மனால் சிறப்பிக்கப் பெற்ற சிவபத்தரும், வேதசாஸ்திர பாரங்கதருமான யஞ்ஞபட்டர் என்ற பிராமண ஆசாரியர்க்கும் இப் பப்ப பட்டாரகர்' என்ற சிறப்புப் பெயர் வழங்கிய செய்தி சாஸனத்தால் தெரிய வருகின்றது. இதனால் அரசர்க்கு ஞான குருவாக முன்னோர் பொருள் கூறினரேனும், ஆழ்வார் காலத்து வழக்காக நமக்குத் தெரியவரும் சாஸனப்பொருள் தள்ளத் தக்கதன்றென்க. 1, Ind. Ant, Vol. XV, p. 274. 2. தைவதமாகாநின்ற பப்ப பட்டாரகரும்' என்று முதற் பரமேசுவரவர்மன் சாஸனத்து வருதலுங் காண்க. (s I. I. Vol. i, p. 157) 3. மூன்றாம் நந்திவர்ம பல்லவனது வேலூர்பாளயச் சாஸனங்களைப் பதிப்பித்த ராவ்ஸாஹிப்: ஸ்ரீ H. கிருஷ்ண