பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 211 விளங்கிய பெரியோர்க்குப் பொதுவாகவே அப்பெயர் வழக்கு உண்டு என்பது பெறப்படும், யான் கண்ட இக்கருத்து அறிஞர்க்கெல்லாம் ஒப்ப முடியுமாயின்-திருமங்கை மன்னன் தமக்குப் 'பப்ப வப்பர்' என்ற பெயர்வழக்கு உண்டென்று குறிப்பிடுவதி னின்று-அரசர் வணங்கற்குரிய ஆசாரியபதத்தை, மேற்குறித்த யஞ்ஞபட்டரைப் போல, இப்பெரியாரும் வகித்து வந்தவர் என்றே சொல்லலாம். இதற்கேற்ப, இவ்வாழ்வார் காலத்தவனும், திருமாலடிமையிற் சிறந்து நின்றவனுமாகிய பல்லவமல்லனை, “பப்பபட்டாரக பாதாநுத்யா வர்த்தமாக மஹிம்நா" என்று அவன் சாஸனமொன்று கூறுகின்றது! பப்ப பட்டாரகரது பாதங்களை இடைவிடாது தியானித்தலால் வளரும் மகிமையுடையவன்' என்பது இவ்வடதொடரின் பொருளாம். சாஸ்திரி அவர்கள், என் கருத்துக்கிணங்க, பப்பபட்டாரக வழக்கைப்பற்றி எழுதியுள்ள கீழ்க்குறிப்பு அடியில் வருமாறு:-This surname (Bappa Bhattaraka) occurs in early Sanskrit charters of the Pallavas and has been translated |Lord father'". Perhaps the term was one of high respect applied to spiritual preceptors, and it is not unlikely that Yajnabhatta stood in this relation to king Nandivarman III The spiritual preceptor of Nandivarman Pallavamalla is also called Bappa Bhattaraka in the Kasakudi plates. s. i. i. vol. ii. p. 506 f. n.) 1. S. 1. 1. Vol. ii, p. 350, line, 78-Kasakudi Plates of Nandivarman II.