பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

212 ஆழ்வார்கள் காலநிலை இவ்வாறு அப்பல்லவனது மகிமை மிகுதற்கு அவன் ஞானகுரு சிறந்த காரணமாகச் சொல்லப் படுதலின், அக்குருவை அவ்வேந்தன் காலத்தவராகக் கருத இடமுண்டு, இங்ஙனம் பரமபாகவதனான பல்லவனது ஞானாசாரியராய் விளங்குதற்கு உரிமை யுடைய பெரியார், திருமங்கை மன்னனினும் சிறந்திருக் தவர் அக்காலத்து வேறியாவர்? அதனால், பப்ப வப்ப ராகிய இவ்வாழ்வார் தங்காலத்து அரசர்க்கு ஞான குருவாக விளங்கியவர்போலும் என்ற ஐயம் நிகழ் கின்றது. இதனுண்மை எவ்வாறாயினும், ராஜருஷிகள் பலரை பப்பபட்டாரக மஹாராஜா' என்று சாஸனங்கள் மிகுதியும் வழங்குகின்றமையின்.! அரசராய்த் துறவு பூண்ட நம் பெரியாரும் அத்தகையாருள் ஒருவராகக் கருதப்பெற்று அவர் காலத்தில் பிரபலராயிருந்தவர் என்பது, அவர் வாய்மொழி கொண்டே. அறியத் தடை யில்லை. ஆலிநாடரும் மங்கை வேந்தருமாகிய இவ் வாழ்வார் இந்திரனுக்கு அமைந்தது போன்ற அரசியற் பெருஞ்செல்வத்தில் இறைவன் தம்மையும் வைத்துள்ள நிலைமையைவெந்திறற் களிறும் வேலைவா யமுதும் விண்ணொடு விண்ணவர்க் கரசும் இந்திரற் கருளி யெமக்குமீந் தருளும் எந்தையெம் மடிகளெம் பெருமான் என்று பாராட்டிக் கூறியுள்ளார்; ஆதலின், இப் பெரியாரை ராஜருஷி' என்னச் சிறிதும் தடையில்லை என்க , 1. Iad. Ant Vol. xv, p. 274.