பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

230 ஆழ்வார்கள் கால நிலை பறையுடைப் பல்லவர் கோன்' என அதன் பெயர்ப் பொருள் விளங்கக் கூறலாயினர் நம்பெரியார் என உணர்க. இனி, பல்லவமல்லனை அவன் சாஸனம்-- “ப்ரணதாவநிபதி மகுடமாலிகாலீட சரணாரவிந்த:" என்று விசேடிக்கின்றது. வணங்கும் மன்னரது முடிமாலைகளால் தழுவப்பெற்ற பாததாமரைகளை உடையவன் என்பது இதன் பொருளாம். இச்சாஸன வாக்கியத்துடன், “மன்னன் தொண்டையர்கோள் வணங்கு நீண்முடிமாலை வயிரமேகன் (பெ. தி. 2, 8, 13) என்ற திருமங்கை மன்னன் வாக்கு ஒத்ததாதல் மேலே விளக்கப்பட்டது. இனி, இருக்கெசுச் சாம வேத நாண்மலர்' என்ற பெரியாழ்வார் அருளிச் செயலின்படி அப்பெயர்களுடன் விளங்கிய வேதம் மூன்றனுள் முதலிரண்டும் முறையே பவுழியம், தைத்திரியம் எனவும் ஆழ்வார்கள் காலத்து வழக்குப் பெற்றிருந்தன என்பது“சந்தோகன் பவுழியனைந் தழலோம்பு தைத்திரியன் சாமவேதி (பெ. தி. 5, 5, 9) சந்தோகா பௌழியா தைத்திரியா சாமவேதியனே (க்ஷ, 7,7, 2) என்ற திருமங்கை மன்னன் திருவாக்குக்களால் அறியப் படும். இவை பண்டைவழக்கே என்பது, திவாகர நிகண்டுடையார் 1. கடுவாய்ப்பறை, பலலவமல்லன் பேரன் மூன்றாம் நந்திக்கும் உரியதாக நந்திக்கலம்பகம் கூறும் (5, 6.) 2. திவ். பெரியாழ்.திருமொழி, 5, 1, 6.